Skip to main content

கழிவறை- ஆம்பூர் நகர தூதரான சிறுமி

Published on 13/12/2018 | Edited on 13/12/2018

 

a

 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் வசிப்பர் ஹனீப்பா ஜாரா. 7 வயதாகும் இந்த சிறுமி இரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவர், டிசம்பர் 10ந் தேதி ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது தந்தை ஏமாற்றிவிட்டார் என புகார் தந்தார். 

 

புகாரில், எனது அப்பா இஹஸ்ஸானுல்லாத். நீ படிப்பில் முதல் ரேங்க் எடுத்தால் வீட்டில் கழிப்பறை கட்டிதருவதாக சொன்னார். எங்கள் வீட்டில் கழிவறையில்லை. திறந்தவெளியில் தான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எல்.கே.ஜீ முதல் தற்போது 2வது படிக்கிறேன். படிப்பில் முதல் ரேங்க் தான் இதுவரை எடுத்து வருகிறேன். ஆனால் கழிப்பறை கட்டித்தராமல் ஏமாற்றி வருகிறார். இதுவும் ஒருவகை ஏமாற்றுதல் தான், எனவே எனது அப்பாவை கைது செய்யுங்கள் அல்லது கழிப்பறை எப்போது கட்டித்தருவார் என எழுத்திக் கொடுக்கச்சொல்லுங்கள் என புகார் கூறியுள்ளார்.

 

புகாரை வாங்கிய போலிஸார் இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதிக்கு தகவல் தர அவர் தரப்பில் இருந்து சுகாதார ஆய்வாளர் வந்து பேசியவர், எங்களுக்கு ஒரு கோரிக்கை மனு தரச்சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.

 

a

 

அந்த தகவலை கூறி சிறுமியை வீட்டுக்கு அனுப்பிவைத்தது போலிஸ். டிசம்பர் 11ந்தேதி மாவட்ட ஆட்சியர் ராமன், உடனே ஆம்பூர் நகராட்சி அதிகாரிகளை அழைத்து நகராட்சி ஒப்பந்ததரார்கள் மூலமாக உடனடியாக கழிவறை கட்டித்தர நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார். அதன்படி டிசம்பர் 12ந்தேதி முதல் கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

 

இதுப்பற்றி ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் பேசியபோது, நாங்கள் பள்ளியில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அதைக்கேட்டு கூட அந்த மாணவி புகார் தந்திருக்கலாம் என்றவர், இவரின் இந்த புகார் சுகாதாரம் குறித்து மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் ஆம்பூர் நகர தூதுவராக நியமித்துள்ளோம் என்றார்.

 
இந்த சிறுமியை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றியுள்ளார்கள் என்கிற விவாதம் சமூக வளைத்தளங்களில் நடந்துவருகிறது.

 

இந்த சிறுமியின் வீட்டுக்கு 6 மாதத்துக்கு முன்பே கழிவறை கட்டுவதற்கான ஓர்க் ஆர்டர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தந்துள்ளோம், கழிவறை கட்டிவிட்டு போட்டோ எடுத்து தந்தால் 8 ஆயிரம் ரூபாய் தந்துவிடுவோம் என அறிவுறுத்தினோம். அந்த சிறுமியின் தந்தை கட்டவில்லை. அது ஏன் என எங்களுக்கு தெரியாது. இப்போது சிறுமி புகார் தந்து பரபரப்பானதால் ஆட்சியர் உத்தரவுப்படி கழிவறை கட்டப்பட்டு வருகிறது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்