Published on 09/03/2024 | Edited on 09/03/2024
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயத்தில் 81 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரியோடு பிரதோஷமும் சேர்ந்து வந்ததால் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மாலை 5 மணிக்கு பிறகு ஆயிரக்கணக்கில் தொடங்கிய பக்தர்கள் கூட்டம் நேரம் ஆக ஆக பல ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். பிரமாண்ட சிவன் சிலையைச் சுற்றி வந்து மெய்நின்றநாதரை வழிபட்டு செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக உணவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கீரமங்கலம் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்தது.