Skip to main content

சிதம்பரம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது; நூலகம் கட்ட 20 லட்சம் நிதி ஒதுக்கீடு

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

 

சிதம்பரம் நகரத்தில் பழமைவாய்ந்த நூலக கட்டிடத்தை நவீன முறையில் கட்ட முதல்கட்டமாக ரூ20 லட்சம் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கியுள்ளதால் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

 

c

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் உள்ள காசுகடைதெருவில் கடந்த 1955-ஆம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி சிதம்பரம் கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில் துவக்கப்பட்டது. இது முதல்நிலை நூலகமாக கடந்த 1982-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 50 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த இந்த நூலகம் கட்டிட வசதி சரியில்லாததால் கடந்த 2006-ஆம் ஆண்டு சின்னகாஜதெருவில் உள்ள வாடகை கட்டிடத்தின் மேல்தளத்தில் மாற்றப்பட்டது. இந்த நூலகத்தில் இந்திய ஆட்சிபணி மற்றும் குடிமைப்பணி நூல்கள் உட்பட 167014 நூல்கள் உள்ளது. 16350 பேர் உறுப்பினராக உள்ளனர். நூல் இரவல் 55296 உள்ளது. நூல்களின் மொத்த பயன்பாடு 222310 ஆகும். 103 புரவலர்கள் உள்ளனர். பெரும்புரவலர் 1 உள்ளனர்.

 

தினந்தோறும் 1500 வாசகர்கள் வந்து செல்கிறார்கள். இதில் மாணவர்கள் 50 பேர் வருகிறார்கள். இப்படி பெருமை வாய்ந்த நூலக கட்டிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மழைகாலங்களில் மேல்தளத்தின் வழியாக மழைநீர் உள்ளே வருவதால் புத்தகங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் முதல்தளத்தில் செயல்படுவதால் வயது முதிந்தவர்கள் நூலகத்திற்கு வர சிரமம் அடைந்து வருகிறார்கள்.  இதனால் சிதம்பரம் நகரத்திலே புதிய நூலகம் கட்டுவதற்கு கடந்த 2012-லிருந்து நூலகத்துறையினர் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வந்தனர்.

 

c

 

இந்த நிலையில் கடந்த 2014,.ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி தலைவராக இருந்த பவுசியாபேகம் ஆகியோரின் முயற்சியால் சிதம்பரம் நகராட்சியில் சிறப்பு கூட்டத்தை கூட்டி நூலகத்திற்கு சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலே கச்சேரி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் ச.அ இடம் வழங்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து இடம் இருந்து கட்டிடம் கட்ட பணம் இல்லாமல் நூலக துறை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லாடி வந்தது. இந்த நிலையில் 1300 ச.அ அளவில் மூன்று அடுக்கில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட நூலகர் பாலசரஸ்வதி தலையில் சிதம்பரம் நூலகர்கள் முத்துகுமரன், ரகுநந்தனன் உள்ளிட்ட ஊழியர்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனிடம் நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். அவரும் நூலகத்தின் அருமை கருதி தொகுதி மேம்பாட்டு நிதியில் முதல் கட்டமாக ரூ 20 லட்சத்தை உடனடியாக ஒதுக்கி அதற்கான உத்தரவையும் கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து நூலகர்கள் கூறுகையில் முதல்தளம் கட்டுவதற்கு ரூ 60 லட்சம் தேவைபடுகிறது. இதில் நூலகத்துறை ரூ20 லட்சம் கொடுக்கஉள்ளது. எம்எல்ஏ நிதி ரூ 20 லட்சம் கிடைத்துள்ளது. சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினர் திருமாவளவனை சந்தித்து நூலகம் கட்டுவதற்கு நிதி கேட்கவுள்ளோம். தற்போது கிடைத்த நிதியை கொண்டு ஒரு மாதத்தில் பணியை தொடங்கவுள்ளதாக கூறினார்கள். சிதம்பரம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன நூலகம் அமைய நிதிஒதுக்கியுள்ளதை அறிந்து அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.    

சார்ந்த செய்திகள்