Published on 30/09/2023 | Edited on 30/09/2023
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் கடந்த 28ம் தேதி காலை 11.20க்கு காலமானார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உயர் பதவிகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டு அரசு மரியாதையுடன் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.