Skip to main content

புளியந்தோப்பு அடுக்கு மாடி கட்டடத்தை நேரில் பார்வையிட்ட சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்! (படங்கள்)

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

 

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் சுவர்கள் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன.

 

 தற்போது அந்த கட்டிடம் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் உள்ளது. இதனை பல அரசியல் தலைவர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு அதன் பின் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்த இடங்களை பூசும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இன்று சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்