தமிழகத்தில் இன்று 41 ஆயிரத்து 325 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 46,960 பேர் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னையில் இரண்டாம் நாளாக 1,200 க்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 77 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது 77,338 பேருக்கு இதுவரை சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக 89,532 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பெறுபவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 68 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 25 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது, 1,966 பேர் இதுவரை கரோனாவிற்கு மொத்தமாக தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
43-ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை இன்று தொடர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் இன்று 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 1,253 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு சென்னை தவிர்த்து பிற மாவட்டங்கள் 713 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 158 பேரும், திருவள்ளூரில் 127 பேரும் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 49, மதுரையில் 116, ராமநாதபுரத்தில் 34, திருவண்ணாமலையில் 22 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் கொரோனாவால் இதுவரை 713 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேல் கரோனா பாதிப்பு கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் 3,076 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 385 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 245, திருவள்ளூரில் 232, மதுரையில் 319, கன்னியாகுமரியில் 104, திருச்சியில் 103, சேலத்தில் 98 ,சிவகங்கை. ராமநாதபுரத்தில் தலா 75 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகரில் 246பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.