Published on 20/01/2019 | Edited on 20/01/2019
![Completed Viralimalai Jallikattu !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/t0fYRMx8qSWcfbpjJX_bdgU5tjaQipo3NlDXT8GB_ZE/1548006684/sites/default/files/inline-images/z2_6.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவு பெற்றது.
புதுக்கோட்டை விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் 2000 காளைகள் விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது சாதனை படைக்கும் நோக்கில் சுமார் 2000 காளைகள் பங்குபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 42 பேர் காயமடைந்தனர். பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
போட்டியில் ஆயிரத்து 1300 காளைகள் மற்றும் 424 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தற்போது இப்போட்டியானது நிறைவு பெற்றது.