தற்போது கரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நகரத்தில் வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 29ஆம் தேதி ஆருத்ரா தேர்த் திருவிழாவும் 30-ஆம் தேதி தரிசன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனையொட்டி திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கருவறைக்கு முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நகரத்தில் வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி ஊர்களிலிருந்து சிதம்பரம் வருபவர்களுக்குத் தனியார் லாட்ஜ் மற்றும் விடுதி, திருமண மண்டபங்களில் தங்குவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்துவதற்கே இந்நடவடிக்கை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் பக்தர்கள் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவை வழக்கமான முறையில் நடைபெற அனுமதிக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.