கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காட்டுமயிலூர் கிராமப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வனத்துறைக்குச் சொந்தமான காட்டினுள் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/602_22.jpg)
அவர்களை நோக்கி வனச்சரக அலுவலர் ரவி, வனவர் மணியரசன், வனக்காப்பாளர் சங்கர், வனக்காவலர் சிவானந்தன் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் சென்ற போது, இரண்டு மர்ம நபர்கள் தப்பித்து ஓடினர். செய்வதறியாமல் திகைத்து நின்ற நபரின் கையில் மானின் தோல் இருப்பதைக் கண்டு வனத்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் உலக அளவில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்து, அனைத்து துறையினரும் போராடி வரும் நிலையில் காட்டிற்குள் சென்று, வன விலங்குகளை வேட்டையாடி, கொன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் பிடிப்பட்ட நிலையில், அவரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இவ்விசாரனையில் பிடிப்பட்ட நபர் காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் காட்டுப்பகுதியில் மான்களை வேட்டையாடி, அதனைக் கொன்று, மானின் தோலை உரித்து விட்டு, மீதம் உள்ள மானின் கறியை விற்பனை செய்வதாகவும், தப்பியோடிய இருவர் மானின் கறியை எடுத்துக்கொண்டு ஓடியதும் விசாரனையில் அம்பலமானது.
பின்னர் ராஜேந்திரனையும், மானைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்தியச் சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிச் சென்ற இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)