vidaamuyarchi team breakdown movie remake issue

துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இது தொடர்பான வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. அதில் அஜித், ஆரவ் இருவரும் கார் ஸ்டண்ட் செய்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்து. இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பின்பு அஜர்பைஜானில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் லுக் வெளியாகியிருந்தது.

Advertisment

அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதோடு விடாமுயற்சி படம் 1997ஆம் ஆண்டு ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான ‘பிரேக்டவுன்’ படத்தின் தழுவல் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பரவும் இந்த கருத்துகளை வைத்து ‘பிரேக்டவுன்’ படக்குழுவினர் லைகா நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சலில் பிரேக்டவுன் படத்தை ரீமேக் செய்திருப்பதாகக் கோரி, ரூ.100 கோடிக்கும் மேல் விடாமுயற்சி படக்குழுவினரிடம் பணம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.