Skip to main content

'மெத்து கடத்தல்; செல்போன் செயலில் விற்பனை'-போதைத்தடுப்பு காவலர்களே கைது

Published on 03/12/2024 | Edited on 03/12/2024
 'Methu Trafficking; Active sale of cell phones'-incident involving the police

மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையாகவே மெத்தப்பட்டமைன் போதைப் பொருட்கள் விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மெத்தப்பட்டமைன்  கடத்தல் வழக்கில் சுரேந்திரநாத் மற்றும் அசோக் நகர் சேர்ந்த காவலர் ஜேம்ஸ் என்பவர்களை வடபழனி போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணையானது நடைபெற்றது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல காவலர்கள் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. காவலர் ஜேம்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் மற்றும் சமீர் ஆகியோருக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தற்பொழுது சமீர் மற்றும் ஆனந்த் ஆகிய இரண்டு காவலர்களையும் வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள நைஜீரிய நபரிடம் இருந்து ஆனந்தன் மற்றும் சபீர் போதைப்பொருளை வாங்கிய மொபைல் செயலி மூலம் நண்பராகும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாகப் போதைப்பொருள் விற்பனையில்  இவர்கள் ஈடுபட்ட பகீர் தகவல் தற்போது அடுக்கடுக்காக வெளியே வந்துள்ளது.

சார்ந்த செய்திகள்