ராஜபாளையம் சேத்தூர் சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்தினுள் தென்காசி பாராளுமன்ற (திமுக) உறுப்பினர் தனுஷ்குமாரும், ராஜபாளையம் சட்டமன்ற (திமுக) உறுப்பினர் தங்கபாண்டியனும் சென்றதால், அதிமுக தரப்பில் கோஷம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே, காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் வெளியேற்றினர். வெற்றி பெற்றும் அறிவிக்காமல் காலதாமதம் செய்வதாகக் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனைத் தொடர்ந்து, ராஜபாளையம் 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூமாரியின் வெற்றியை அறிவித்து சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, தென்காசி எம்.பி. தனுஷ்குமார் தலைமையில், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுகவினர், காந்தி சிலை ரவுண்டானாவில் சாலை மறியல் செய்தனர்.