Skip to main content

சென்னை அருகே வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குவியல்... தீவிரவாதிகளுக்கு தொடர்பா?

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

சென்னைக்கு அருகே அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு பலகட்டமாக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் போன்ற சுடும் பயிற்சிகள் நடத்தப்படும். அதே நேரத்தில் துப்பாக்கி மற்றும் லாஞ்சர்களில் இருந்தும் வெளியேறும் குண்டுகளின் குப்பிகளை அப்படியே விட்டுவிடுவது வழக்கம். அதில் பல வெடிக்காத குண்டுகளும் இருக்கும் சில நாட்கள் மட்டும் தொடரும், இந்த பயிற்சி முடிவடைந்த பின் அப்பகுதி மக்கள் கீழே சிதறிக்கிடைக்கும் குண்டுகளில் உள்ள அலுமினியம், செம்பு, அலுமினியம் போன்ற உலோக குப்பிக்களை சேகரித்து இரும்பு கடையில் விற்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. 

CHENNAI POLICE TRAINING INCIDENT POLICE INVESTIGATION


அந்த நேரத்தில் சில வெடிக்காத குண்டுகளும் கிடைக்கும். சில சமயம் அது வெடித்து விபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கடந்த மானமதி பகுதியில் ஏற்பட்ட விபத்திலும் இரண்டு சிறுவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் டிசம்பர் 10- ஆம் தேதி அன்று அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த ராமு என்கிற ராமகிருஷ்ணன். அந்த பகுதியில் வெடிக்காமல் இருந்த குண்டுகளை பைக்கில் எடுத்து சென்ற போது, அது கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.


இதில் ராமகிருஷ்ணனின் வலது காலும் சிதறியது. அதே நேரத்தில் அருகே துணி துவைத்துக்கொண்டிருந்த கோவிந்தமாள் என்பவர் மீதும் குண்டு பாயிந்து காயமடைந்தார்கள். இருவரையும் மீட்டு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் காயமடைந்துள்ள ராமகிருஷ்ணன் மயக்கம் தெளிந்த பின் தான் விசாரணை நடத்த முடியும் என்று கூறினார். 


மேலும் ராமகிருஷ்ணனின் வீட்டில் நடத்திய சோதனையில் வெடிக்காத பல ராக்கெட் லாஞ்சர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்தனை லாஞ்சர் குண்டுகளை பதுக்கி வைத்துள்ளதில் பின்னணியில் ஏதோ தீவிரவாத தொடர்புள்ளதா? அல்லது யார் இதை பயன்படுத்த குவியலாக சேகரித்து வைத்துள்ளார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்