Published on 14/07/2022 | Edited on 14/07/2022
சென்னை மேயரின் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப்பில் மோசடி செய்ய முயன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மேயர் ப்ரியாவின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபி ஆக வைத்து அவர் மெசேஜ் செய்வது போல் சென்னை மண்டல அதிகாரிகள் மூன்று பேரிடம் அமேசான் கிப்ட் கார்ட் மூலமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணம் கேட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சென்னை மேயர் பிரியா பெரியமேடு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.இந்த நூதன மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் இதேபோல் கோவை மேயர் உட்பட பல மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை வைத்து மோசடி கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.