காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழினிசாமி தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்றம் அளித்த கெடு நாளை முடியும் நிலையில் முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். நாளை கெடு முடிவதால், சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் விவகாரத்தில் கால அவகாசம் முடிந்த பிறகு தான் அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் விவகாரத்தில் கால அவகாசம் முடிந்த பிறகு தான் அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.