Published on 16/06/2019 | Edited on 16/06/2019
மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 18 இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதி என திருமாவளவன் விமர்சித்ததாக புகார் எழுந்த நிலையில் காந்தி இந்து தீவிரவாதி, கோட்சே இந்து பயங்கரவாதி என திருமாவளவன் பேசியது தொடர்பாக 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் முன்னணி தலைவர் வி.ஜே.நாராயணன் அளித்த புகாரின்பேரில் அசோக் நகர் போலீசார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.