Skip to main content

இந்த வெற்றி பத்தாது... அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி வேண்டும் - எம்எல்ஏக்களிடம் ஸ்டாலின் பேச்சு !

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
ுபர

 

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், திமுக தலைமையிலான புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வருகின்ற 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்த கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மு.க ஸ்டாலின், " எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும். தற்போது பெற்றுள்ள வெற்றி மாபெரும் வெற்றி அல்ல, எனவே அடுத்து வரும் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெறும் அளவிற்கு அடுத்த 5 ஆண்டுகள் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்