தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,344 லிருந்து குறைந்து 1,329 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று குறைவு. கடந்த சில நாட்களாக ஒருநாள் தொற்று குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,40,091 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 171 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 164 என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,783 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,130 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,436 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,26,352 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். 12 வயதிற்குட்பட்ட 80 சிறார்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கோவை-132, ஈரோடு-78, செங்கல்பட்டு-99, திருவள்ளூர்-54, தஞ்சை-66, சேலம்-54, திருச்சி-50, திருப்பூர்-91, நாமக்கல்-63 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.