
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை ஆகும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொங்கல் நாளான 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாளான 16 ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முகூர்த்தக் கால் இன்று (08.01.2024) நடப்பட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் madurai.nic.in என்ற இணையதளத்தில் காலையில் மற்றும் மாடு கொடி வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.