எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

அண்ணா இருந்திருந்தால் மும்மொழிக் கொள் கையை ஆதரித்திருப் பார் என்ற டி.டி.வி. தினகரனின் பேச்சு..?

எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் புரளும். மோடியைக் கட்டி யணைத்து திராவிடச் செம்மல் என பெரியார் பாராட்டியிருப்பார். அமித்ஷாவை பக்கத்தில் இழுத்து பாயும் புலியென அண்ணா அகமகிழ்ந்திருப் பார் என பதினாறு ரீல்கூட ஓட்டலாம். தி.மு.க. பக்க மிருந்து யாராவது, இதுவும் ஒரு பிழைப்பா என்று அண்ணா காறித்துப்பியிருப் பார் என்றுகூட சொல்லலாம். கேப்பையில் நெய்வழிகிறதென் றால் கேட்பவர்கள்தான், வாய் பிளந்து நிற்காமல் சிரித்து விட்டு நகர்ந்துவிடவேண்டும்.

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி

வடமாநிலங்களில் நடக்கும் மோசமான நிகழ்வுகளைப் பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மூச்சே விடுவதில்லையே இது நியாயமா?

தமிழகம் வடமாநிலங்களை விட சீரழிந்துகிடக்கிறது என்றால் தான், ஆட்சி மாற்றத்தைப் பற்றி மக்கள் யோசிப்பார்கள். வடக்கைவிட தமிழகம் சிறப்பாக இருக்கிறதென்று பேசினால், அவர்களுக்கு என்ன ஆதா யம் இருக்கிறது? வகிக்கும் பொறுப்புக் கும் கிடைக்கும் சில்லறைக்கும் சூன்யம் வைக்கப் பார்க்கிறீர்களே நியாயமா?

என். இளங்கோவன், மயிலாடுதுறை

தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று கூறுகிறாரே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..?

மாமியார் உடைச்சா மண்குடம்... மருமக உடைச்சா பொன்குடம் கதையாக, வடமாநிலங்களில் தேர்வறைகளில் முதல் தளம், இரண்டாம் தளம் வரைக்கும் வந்து பிட்டுக் கொடுத்தாலும், புத்தகத் தை வைத்து எழுதினாலும், அங்கேயுள்ள மாணவர் கள் பெருவாரியாக ஹிந்தியிலேயே பெயிலானாலும், நீட் முதல் அனைத்துவிதமான அரசுத் தேர்வுகளுக் கும் கேள்வித்தாள் வெளியானாலும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதினாலும் அவர்களின் கல்வித் தரம் அற்புதம். இந்திய மாநிலங்களிலேயே கல்விக் கட்டமைப்பில் முதல், இரண்டாம் இடங்களில் வந்தா லும் தமிழகத்தின் கல்வித் தரம் மட்டம். ஆர்.எஸ்.எஸ். அளவுகோலை விழுங்கிவிட்டால், அப்புறம் எல்லாம் கோணலாகவும், தலைகீழாகவும்தான் தெரியும்.

mm

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

கனடா பிரதமர் ராஜினாமா செய்தபிறகு தன்னுடைய நாற்காலியை எடுத்துச்சென்ற புகைப்படத்தைப் பார்த்தீரா...?

கனடாவில் புதிய தலைவர் பதவிக்கு வந்த வுடன், பதவி விலகும் தலைவர் தனது நாற்காலியை எடுத்துச்செல்வது வழக்கமான மரபுதான் எனச் சொல்லப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோ, நாற்காலியைத் தூக்கியபடி நாக்கை கிண்டலாக வெளியே நீட்டியிருக் கும் புகைப்படம் உண்மையிலேயே வேடிக்கை உணர் வை ஏற்படுத்தக்கூடியதுதான். இந்தப் புகைப்படங் களுக்குக் கீழே வெளியான ஒரு கமெண்ட் நாசூக் காக ட்ரூடோவை விமர்சிக்கவும் செய்திருக்கிறது. "10 வருடங்களாக கனடாவைக் கொள்ளையடித்தார். விடைபெறும்போது ஒரு நாற்காலியைத் திருடக் கூடாதா என்ன?''

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

Advertisment

"நிதிஷ்குமார் "பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார்' என்று லாலுபிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவி நேரடியாகவே குற்றம்சாட்டுகிறாரே?

சமயங்களில் சில குற்றச்சாட்டுகள் அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படுவதாக இருக்கும். இவ்வருடம் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகார் தேர்தல் வரவிருக்கிறது. அதனால் அத்தனை சீரியஸாக எல்லாம் இந்தக் குற்றச்சாட்டை எடுத்துக்கொள்ள முடியாது. அவர் ஆட்சியின் குறைபாடுகள், ஊழல்கள் பற்றி விமர்சித்தால் பொருட்படுத்தலாம்.

ப.நதியா, பரமக்குடி

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், க்ரீன் கார்டு வைத்திருப்பதால் மட்டும் நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட முடியாதென்றிருக்கிறாரே?

அழிவு காலம் வரும்போது புத்தியும் விபரீதமாகவே சிந்திக்கும் என்பார்கள். குடியேற்றத்தால் பெரிதும் வளர்ந்த நாடு என்றால் அது அமெரிக்காதான். இன் றைக்கு அங்கே குடியேறி க்ரீன் கார்டு வைத்திருக்கும் லட்சக்கணக்கான பேரை அச்சுறுத்தும்விதமாகப் பேசி னால், அது அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் எதி ரொலிக்கும். ஏற்கெனவே ட்ரம்ப்பின் ஏடாகூட நடவடிக்கைகளால் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை வருமோ என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சிக்கொண்டிருக் கிறார்கள். இதில் இந்த மாதிரி பேசினால், அது சீக்கிரமே வந்துவிடும்.

சிவா, கல்லிடைக்குறிச்சி.

சுங்கச்சாவடிகளை மூடமுடி யாது என நிதின் கட்கரி கூறியிருப்பது குறித்து?

எப்படி பள்ளிகள், மது ஆலைகள் போன்றவை அரசியல் வாதிகளுக்கு மறைமுகமாகச் சொந்தமாக இருக்கிறதோ, அதுபோல பல சுங்கச்சாவடி களையும் தனியார் நிறுவனங்கள் ஏலம் எடுத்திருக்கும். மறைமுக மாக அந்த தனியார் நிறுவனம் குறிப்பிட்ட அரசியல்வாதி களுக்குச் சொந்தமானதாக இருக்கும். அதனால் பொன் முட்டை போடும் வாத்தை லேசில் அறுத்துவிடமாட் டார்கள்.