Published on 07/09/2019 | Edited on 07/09/2019
திமுக இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்று முதன்முறையாக மதுரைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்று திமுகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தாலும், அழகிரியின் அதிதீவிர ஆதரவாளரான நாகூர் கனி ஒட்டிய போஸ்டர்தான் பரபரப்பை கூட்டியுள்ளது.
![azhagiri supporter welcome the udhayanithi via poster in madurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/uNEuxn4_Ah7yEzVmNgnwFE1UJevTxW8KsPMn3Y9YPrw/1567859316/sites/default/files/inline-images/zz14_10.jpg)
உங்கள் பெரியப்பாவின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்தான் அது. தற்போது அழகிரி உடல் நலம் சரியில்லாத இந்த நேரத்தில் இப்படி வாழ்த்திருப்பது. ஒருவேளை அழகிரியை பார்த்து நலம் விசாரிக்க உதயநிதி ஸ்டாலின் தன் பெரியப்பாவான அழகிரி வீட்டிற்கு வருவாரா என்ற பரபரப்பையும் திமுகவினர் மத்தியில் எழுப்பியுள்ளது.