சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகை விழாவில் தந்தை பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சை ஆனது. பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை ரஜினிகாந்த் பரப்பி வருவதாக, அவர் மீது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்வதற்கு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
![actor rajinikanth related case file disposed chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/wVHIqojlLb39xVF5nHz6ChEnxXVc1f4-2hEDZFD7TXg/1579850025/sites/default/files/inline-images/rajini444.jpg)
இந்த வழக்கு, நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக இன்று (24.01.2020) விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் கொடுத்து 15 நாட்கள் முடிவதற்கு முன்பாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.‘புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பிறகு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகியிருக்க வேண்டும்.
![actor rajinikanth related case file disposed chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/GIzFHmKsTFNwdEt4ESGNw3vhj_gLFtrlLjfrCetAHAI/1579850059/sites/default/files/inline-images/Chennai_High_Court123_3.jpg)
இந்த மனுக்கள் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டதே தவறு.” என்றார் நீதிபதி ராஜமாணிக்கம். இதனைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், மனு தள்ளுபடியானது.