சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கூடா நட்பு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்ற அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை கமிசனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், இந்த புகார் மனுவில் தனக்கு எந்தவித உள்ளோக்கமும் கிடையாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் தவறான நட்பால் குழந்தைகளை கொலை செய்வதும் தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற குற்றங்கள் சமூக சீர்கேட்டுக்கு காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூர் அருகே அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை ஈவு இறக்கமின்றி கொலை செய்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை போலீசார் இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டும்.
எனவே குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கூடாது. கைதானவர்களை சிறைக்குள் இருக்கும் நாளுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.