5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
5 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏப்.15 ஆம் தேதி தொடங்கி ஏப்.20 ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. அதேபோல் 8 ஆம் வகுப்பிற்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்.17 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
5 ஆம் வகுப்புக்கு ஏப்.15- தமிழ், ஏப்.17-ஆங்கிலம், ஏப்.20 -கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்புக்கு அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கு பொதுத்தேர்வு கிடையாது. 8 ஆம் வகுப்புக்கு மார்ச்.30 - தமிழ், ஏப்.2-ஆங்கிலம், ஏப்.8-கணிதம், ஏப்.14-அறிவியல், ஏப்.17 - சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
மாணவர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நோக்கில் முன்னதாகவே தேர்வு அட்டவணை பட்டியல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்வுகள் குறித்து பெற்றோர்கள் பபயப்பட வேண்டாம். மூன்று ஆண்டுகளுக்கு இந்த தேர்வுகள் எழுதினால் மட்டும்போதும். தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் மாணவர்கள் கட்டாய தேர்ச்சிபெறுவார்கள். மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் கடுமையான பொதுத்தேர்வு முறைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேசிய அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த பொதுதேர்வுமுறை கொண்டுவரப்பட்டதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.