Skip to main content

தமிழகம் முழுவதும் 56 போலீஸ் எஸ்.ஐக்கள் டிரான்ஸ்பர்; டிஜிபி உத்தரவு

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் 56 பேர் ஒரே நேரத்தில் திடீரென்று இடமாறுதல் செய்து டிஜிபி இன்று (செப். 27, 2018) மாலை உத்தரவிட்டுள்ளார். 


அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து 18 உதவி ஆய்வாளர்களும், வேலூர் மாவட்டத்தில் இருந்து 6 பேரும், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் இருந்து தலா மூன்று பேரும் இடமாறுதல் பெற்றுள்ளனர். 

 

police

 

புதிய பணியிடம் ஒதுக்கீட்டிலும் சென்னை பெருநகர காவல்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இடமாறுதல் உத்தரவு பெற்றவர்களில் 15 உதவி ஆய்வாளர்கள் சென்னை பெருநகர காவல்துறைக்கும், மூன்று பேர் சென்னை ரயில்வேக்கும் இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். 


இடமாறுதல் உத்தரவு பெற்ற உதவி ஆய்வாளர்கள் ஒரு வார காலத்திற்குள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட புதிய பணியிடத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் டிஜிபி அலுவலக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 


இந்த உத்தரவு நகல் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர ஆணையர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
 

சார்ந்த செய்திகள்