Published on 02/02/2019 | Edited on 02/02/2019
கோவை சின்னத்தடாகத்தில் பிடிபட்டு டாப்ஸ்லிப் பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானையை கும்கி யானையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கோவை சின்னத்தடாகத்தில் பிடிபட்டு டாப்ஸ்லிப் பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை 100 கிலோமீட்டர் கடந்துவந்து திருப்பூர் கிருஷ்ணபுரம் பகுதியில் சுற்றித்திரிகிறது. மேலும் சின்னத்தம்பி வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில், மாநாட்டில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
சின்னத்தம்பியை பிடித்து பல்வேறு பயிற்சிகள் கொடுத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.