Skip to main content

அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் கைது! - நீதிபதி கண்டனம்!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
sd


அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் கைது செய்யப்பட்டதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
 

sdf


அப்போது அங்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தூய்மைப்பணியில் ஈடுப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட 13 உறவுகளையும் கைது செய்து அவர்கள் மீது 147,148,353,506(ii)Ipc உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிந்து சிறைப்படுத்துவதற்காக நீதிபதி முன் நேர் நிறுத்தப்பட்டபோது இவ்வழக்கில் சிறைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று காவல்துறையினரின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதின் பேரில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், அரசும் பொதுப்பணித்துறையினரும் செய்யவேண்டிய வேலையை பொதுமக்களே செய்துள்ளனர். இதற்காக கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் சிறைப்படுத்துவதா என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்