தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 1- ஆம் தேதியில் இருந்து பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழக பாஜக தலைவர் முருகன், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதாவது, 17-ந் தேதி முதல்வர் எடப்பாடியிடம் முருகன் வாழ்த்து பெற்ற போது, என்ன சார்? இதுவரை உங்களைப் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லையே...ன்னு எடப்பாடி வியப்பு தெரிவிச்சதோட, இதுவரை டெல்லியிலா இருந்தீங்க? என்ன செஞ்சிக்கிட்டு இருந்தீங்கன்னு கூலாக விசாரித்திருக்கிறார். முருகனும் தன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் எடுத்துச் கூறியதோட, நான் டெல்லியில் இருந்தாலும் தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருந்தேன். உங்கள் பணிகள் என்னை கவர்ந்திருக்கு என்று பாராட்டினார். பதிலுக்கு எடப்பாடியும், தமிழக அரசியலுக்குப் புதுமுகமான நீங்கள், மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் என்று மகிழ்வோடு ஆசி வழங்கியிருப்பதாக சொல்கின்றனர்.