Skip to main content

பெயரை மாற்றிய கௌதம் கார்த்திக்

Published on 22/02/2025 | Edited on 22/02/2025
gautham karthik changed his name to Gautham Ram Karthik

தமிழில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கௌதம் கார்த்திக் கடைசியாக ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் கடந்த வருடம் அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் தற்போது 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் ஒரு நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தனது பெயரை திடீரென்று மாற்றியுள்ளார். அதாவது கௌதம் கார்த்திக் என்று இருக்கும் பெயரில் ராம் என்ற வார்த்தையை சேர்த்து 'கௌதம் ராம் கார்த்திக்' என மாற்றியுள்ளார். இவ்வாறே தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் குறிப்பிட்டுள்ளார். இனி வரும் படங்களிலும் அதையே தொடரவுள்ளார். 

முதலாவதாக மிஸ்டர் எக்ஸ் படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசர் அப்டேட் குறித்த போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கூட கௌதம் கார்த்திக் பெயர் அவரது புதிய பெயரான கௌதம் ராம் கார்த்திக் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. புது பெயருடன் வெளியாகக்கூடிய முதல் படமாக இப்படம் அமைந்துள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவியும் தனது பெயரை ரவி மோகன் என் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்