Published on 28/06/2019 | Edited on 28/06/2019
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் துறை ரீதியான கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிப்பார்கள். ஒவொரு துறையில் இருக்கும் சந்தேகம் மற்றும் கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்கலாம். அதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் பதில் தருவார்கள். மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் கூறியிருந்தார்.இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்திலிருந்து திமுக பின் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவிற்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் தோல்வியை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் வாங்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதால் திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.