Skip to main content

வெளிநாட்டில் தாய்மாமன் உறவுகள்! ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்? -கே.டி.ராஜேந்திரபாலாஜி சுளீர்!

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

வேலூர் பாராளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  

 

rajendra balaji speech about rahul gandhi

 

 

அப்போது பேசிய அவர், “ராகுல்காந்தி தலைமையை ஏற்க காங்கிரஸ் கட்சியில் உள்ள தொண்டர்களே முன்வரவில்லை.  அவரும் அக்கட்சியின் தலைவர் பதவி வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டார். ராகுல்காந்திக்கு தாய்மாமன் உறவு மற்றும் மற்ற உறவு முறைகள் எல்லாம் வெளிநாட்டில் உள்ளனர்.  அவர் எப்படி இந்தியாவின் பிரதமராக முடியும்? அந்த வாய்ப்பை எப்படி இந்திய மக்கள் அளிப்பார்கள்?  இலங்கைத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொன்ற காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈழத்தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது அதிமுக. 

ஈழத் தமிழர்களுக்காக அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பல்வேறு நிதி உதவிகள் செய்தார். அவர் வழியில் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் நலனுக்காக தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தார்.  ஏழு தமிழர்கள் விடுதலைக்காக தனியாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இப்படி எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து,  ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் அயராது உழைத்தார் ஜெயலலிதா.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்