Skip to main content

கரோனா வைரஸால் காணாமல் போன சிஏஏ போராட்டம்... பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து! 

Published on 10/03/2020 | Edited on 13/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு அந்த பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

bjp


இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் மோடிக்கு ஆதரவாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரானா, மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறது_எதிர்க்கட்சிகள் ஆவேசம். CAA எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது... கச்சா எண்ணெய் பீப்பாய் 33 டாலர்க்கு வந்து விட்டது... #கொரோனா_பீதியில்_ எதிர்கட்சிகள்?? என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்