தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் ‘நீதி கேட்கும் நெடும் பயணம்’ என்ற பெயரில் வாகன அணிவகுப்பும், ஊர்வலங்களும் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற இந்நிகழ்வுகள் கிராமங்கள், நகரங்களில் பேராதரவைப் பெற்றுள்ளன. நேற்று (10/01/2021) தஞ்சாவூரில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய போராளிகள் திரண்டு வந்திருந்தனர். அங்கு வந்த அனைத்து விவசாயிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரவு உணவு பொட்டலங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டது. இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாயிகளின் போராட்டங்களுக்கு அரசியலைக் கடந்து மஜகவும், அதன் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆதரவளித்து வருவதைப் பாராட்டியதுடன், டெல்லியில் ஆம் ஆத்மி விவசாயிகளை உபசரிப்பது போல தமிழகத்தில் மஜக விவசாயிகளை உபசரிப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மஜக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் அப்துல் சலாம், தஞ்சை மாநகர மாவட்டச் செயலாளர் அகமது கபீர் ஆகியோர் முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட மஜக விவசாய அணியினர் இப்பணியை மேற்கொண்டனர்.