தமிழகத்தில் திமுக , அதிமுக தலைவர்களும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்த நிலையில் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர், அன்புமணி, பிரசாரம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் போது பூத்ல நாம தான் இருப்போம் புரியுதா ? நான் என்ன சொல்ல வரேன்னு தெரியுதா ? என்று பேசியது சமூகவலைதளங்களில் பரவியது இதையடுத்து எதிர்க்கட்சிகள் அன்புமணி பேசியதில் உள் நோக்கம் உள்ளது எனவும் அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் கூறினார்கள் , இதனை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஏழுமலையை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பேச தொடங்கிய அன்புமணி வேட்பாளர் எங்க என்று கேட்டுள்ளார் உடனே வேட்பாளர் எழுந்து வந்து நின்றார் ,அப்போது ஏழுமலை உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து கடுப்பான அன்புமணி இங்க மக்களும் , நானும் வெயிலில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறோம் நீங்க உட்காந்து இருக்கிறீங்க என்று கோபமாக கூறினார். பிறகு தேர்தல் முடியும் வரை உட்காரக் கூடாது நின்று கொண்டே தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் , இதைக்கேட்ட அதிமுகவினர் வேட்பாளரிடம் மேடையில் அன்புமணி கோபமாக பேசியதை கடும் அதிருப்தியுடன் பார்த்து உள்ளனர் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது .