Published on 30/06/2023 | Edited on 30/06/2023

அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருகின்ற 5.7.2023 - புதன் கிழமை காலை 9 மணிக்கு, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.