Published on 10/03/2019 | Edited on 10/03/2019
அதிமுக - தேதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடித்து வந்த இழுபறி இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முடிவுக்கு வந்தது. இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் , பிரேமலதா விஜயகாந்த், சென்னை கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு வந்தனர். அங்கே கூட்டணி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வின் போது அமைச்சர்களும், சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.