Skip to main content

நாகையில் பேரிடர் மீட்பு குழு முன் கூட்டியே முகாமிட வேண்டும்!  தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

மழை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து கடும் மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்கள் கடலோர மாவட்டங்களை நெருங்குவது வழக்கமானது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக இருக்கின்றன.

 

THAMIMUN ANSARI



இந்நிலையில் இன்று பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையர் ராதாகிருஷ்ணனை, மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி எழிலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது நடப்பு வானிலை நிலவரங்களை கருத்தில் கொண்டு, அடுத்த 3 மாதங்களுக்கு மாநில அரசின் பேரிடர் மீட்பு குழுவினரை நிரந்தரமார நாகப்பட்டினத்தில் முகாமிட செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 
 

இது டெல்டா மாவட்டங்கள் அனைத்திற்கும் உதவியாக அமையும் என்பதை குறிப்பிட்டவர், இதற்காக விதிகளில் தளர்த்தல் செய்தாலும், அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும் என்றார். இது குறித்து அரசிடம் பேசி பரிசீலிப்பதாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
 

 பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் R.B. உதயகுமாரை சந்தித்த தமிமுன் அன்சாரி, மழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான சில கருத்துகளை அவரிடம் பகிர்ந்துக் கொண்டார். 


 

சார்ந்த செய்திகள்