Skip to main content

நாங்குநேரியில் 6 கம்பெனி துணை ராணுவ படையினா், 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

 

காலியாக உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 

திமுக, காங்கிரஸ், நாம் தமிழா் என அரசியல் கட்சி  வேட்பாளா்களோடு 23 போ் களத்தில் உள்ளனா். 1 லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலியினத்தினா் 3 போ் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்காளா்கள் உள்ளனா்.

 

nanguneri



இதற்காக  299 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 110 வாக்கு சாவடிகள் பதட்டமானதாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாங்குநேரியில் 23 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 299 வாக்கு சாவடிகளிலும் 598 வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 1475 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 

 

மேலும் பாதுகாப்பு பணியில் 6 கம்பெனி துணை ராணுவ படையினா் மற்றும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவா்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் மற்றும் பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.  இதை வீடியோ காமிரா மூலம் தோ்தல் ஆணையம் பதிவு செய்கிறது. இதையடுத்து 24-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி  நாங்குநேரி தொகுதி முமுவதம் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளது.


 

 

 

 

சார்ந்த செய்திகள்