
தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றங்கரையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பகதூர்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திர குமார். ஓய்வு பெற்இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு, மாயா தேவி (50) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், பீகாரில் உள்ள பக்சர் ரயில் நிலையத்திலிருந்து மகளை அழைத்துச் செல்ல தனது கணவர் புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை எனவும் கடந்த 10ஆம் தேதி மாயா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், தேவேந்திர குமாரின் செல்போன் ஸ்விட்ஸ் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, புகார் கொடுத்த மாயா தேவியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மாயா தேவிக்கும், அணில் யாதவ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களது உறவில் இடையூறாக இருப்பதாக எண்ணி, கணவர் தேவேந்திர குமாரை கொலை செய்ய தனது ஆண் நண்பர் அணில் யாதவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதன்படி, தேவேந்திர குமாரை கொலை செய்து அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி ஆற்றங்கரையில் வீசியுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆற்றங்கரையில் வீசப்பட்ட தேவேந்திர குமாரின் உடலை ஒவ்வொன்றாக தேடி வருகின்றனர். இதில், துண்டிக்கப்பட்ட கை கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அருகில் உள கிணற்றில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தேவேந்திர குமாரின் தலையை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், மாயா தேவி, அணில் குமார் மற்றும் இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.