Skip to main content

‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவருக்கு விமானத்தில் கவுரவம்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Paramveer Chakra awardee Subedar Major Sanjay Kumar honored in flight

 

கார்கில் வெற்றி தினம் இன்று நாட்டின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதி  அனில் சவுகான் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் பல பகுதிகளில் கார்கில் போரின் போது மறைந்த ராணுவ வீரர்களைப் போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தினர்.

 

இதற்கிடையில், எதிரிப்படைகளிடம் வீரத்தையும், இந்திய நாட்டுக்காகத் தியாகத்தையும் செய்யும் படைவீரருக்கு மத்திய அரசு சார்பாக, இந்தியாவின் உயரிய விருதான  ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்க்கப்பட்டுவருகிறது. இந்த விருது இந்திய வரலாற்றிலேயே 21 பேருக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது. அந்தப் போரின் போது இந்திய ராணுவ வீரர்  சஞ்சய் குமார்,   தனி ஆளாகப் பாகிஸ்தான் ராணுவ பங்கருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார். இதனால், இவருக்கு மத்திய அரசால் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் சமீபத்தில்  தனியார் விமானத்தில் பயணித்தார். வழக்கமாகச் சாதனையாளர்கள் எவரேனும் விமானத்தில் பயணித்தால், அந்த விமான நிறுவனம் அவர்களைக் கவுரவப்படுத்தும். அந்த வகையில், கார்கில் போரின் போது பரம்வீர் சக்ரா விருது வாங்கிய சஞ்சய் குமாரை, விமான  கேப்டன், துணை கேப்டன், ஏர் ஹோஸ்டஸ் மற்றும் விமான ஊழியர்கள் கவுரவித்தனர். அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் கை தட்டி சஞ்சய் குமாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

 

பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களில், சஞ்சய் குமார் மட்டும் தான் இன்னும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் குமாரை விமானத்தில் கவுரவப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் 8 விமானங்கள் ரத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

8 flights canceled in Chennai
மாதிரிப்படம்

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அந்த வகையில், சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் நான்கும், சென்னைக்கு வருகை தர வேண்டிய விமானங்கள் நான்கும் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று (30.11.2023) காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்ல இருந்த விமானம், காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஆந்திரா மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Direct flight between Chennai and Mauritius

 

சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. மொரீஷியஸில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், சென்னையில் இருந்து சனிக்கிழமை தோறும் விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னை - மொரீஷியஸ் இடையேயான வாராந்திர விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் இயக்க உள்ளது. இந்த நேரடி விமான சேவைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்