Skip to main content

மீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் ஹைட்ரோ கார்பன்; புதிதாக இரண்டு மண்டலங்கள்...

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் புதிதாக இரண்டு ஹைட்ரோ கார்பன் மண்டலங்களை நிறுவ மத்திய அரசு ஏலம் நடத்தவுள்ளது.

 

fgbfff

 

திருவாரூரில் திருக்கரவாசல், நாகை மாவட்டம் கரியாப்பட்டினம், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த மாதம் மத்திய அரசு ஏலம் நடத்தியது. இந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வரும் மார்ச் மாதம் ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்க உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று வரை பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே டெல்டா பகுதியில் புதிதாக இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் 3 கட்ட ஏலங்களில் இந்த மூன்றாம் கட்ட ஏலமானது வரும் ஏப்ரல் 10 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது டெல்டா விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்