Skip to main content

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகம்; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/12/2024 | Edited on 20/12/2024
Tragedy happened to the young woman for Suspicion of the husband in madhya pradesh

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிகா மிஸ்ரா(35) இவருடைய கணவர் பிரஜேஷ் மிஸ்ரா. பிரஜேஷ் மிஷ்ரா, சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கட்டுமான நிறுவனத்தில், அனிகா மிஸ்ரா (33), என்ற பெண் வேலைசெய்து வந்தார்.  

இந்த நிலையில், தனது கணவருக்கு அனிகாவுடன் தொடர்பு இருப்பதாக ஷிகா மிஸ்ரா சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து ஷிகா மிஸ்ரா நேற்று முன் தினம் அனிகா மிஸ்ராவை, சோனம் என்பவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அவருடைய அழைப்பை ஏற்று அந்த இடத்திற்கு சென்ற அனிகாவுக்கும், ஷிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஷிகா மிஸ்ரா, அனிகா மிஸ்ராவை கத்தியால் குத்தினார். அவரை தடுக்க முயன்ற சோனமுக்கும் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட அனிகா, படுகாயமடைந்த ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சோனம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷிகா மிஸ்ராவை கைது செய்தனர். கம்பெனியில் வேலை செய்த பெண் ஊழியரை, சந்தேகம் என்ற போர்வையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்