![Youth arrested for misbehaving with 7-year-old girl in Uttar Pradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/sly5tfi06WofWVMx0PXdubyi8ag4EJy3jvG5Qx2hQCM/1691472923/sites/default/files/inline-images/th-2-2_125.jpg)
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 7 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் நர்ஹி கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டில் பக்கத்தில் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரல் யாதவ்(19) என்ற இளைஞர் சிறுமியைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின் சிறுமியை யாரும் இல்லாத பகுதிக்குக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வன்கொடுமை செய்த சரல் யாதவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.