கருப்பு சட்டம் மூலம் விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இனியாவது மத்திய அரசு உணர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருந்தால், விசாரிக்க குழு அமைக்கிறோம். வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள்; இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்’ என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், கருப்பு சட்டம் மூலம் விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இனியாது மத்திய அரசு உணர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.