Published on 29/12/2021 | Edited on 29/12/2021
பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த இக்கூட்டத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அண்மையில் பிரதமர் மோடி ஒமிக்ரான் பரவல் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அமைச்சர்கள் கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் உத்தரப்பிரதேச தேர்தலை தள்ளி வைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.