Skip to main content

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் v தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும்? - டாக்டர் ரெட்டி'ஸ் நிறுவனம் தகவல்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

sputnik v

 

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் பெரு நகரங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ஸ்புட்னிக் v தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

 

இவ்வாறு செலுத்தப்படும் ஸ்புட்னிக் v தடுப்பூசிகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்புட்னிக் v தடுப்பூசிகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த தகவலை, அத்தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வரும் டாக்டர் ரெட்டி'ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக டாக்டர் ரெட்டி'ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், "31.5 லட்சம் காம்போனென்ட் - 1 ஸ்புட்னிக் v  டோஸ்களையும், 4.5 லட்சம் காம்போனென்ட் - 2 ஸ்புட்னிக் v டோஸ்களையும் இதுவரை நாம் பெற்றுள்ளோம். விநியோகத்தை அதிகரிக்க ரஷ்ய நேரடி நிதியத்துடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் v தடுப்பூசி டோஸ்கள் வரும் செப்டம்பர் - அக்டோபர் கால அளவில் பயன்பாட்டிற்கு வரலாம்" எனக் கூறியுள்ளார்.

 

ஸ்புட்னிக் v தடுப்பூசி விரைவில் அரசு தடுப்பூசி மையங்களிலும் செலுத்தப்படும் என மத்திய அரசின் கரோனா பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்