பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு 6.75 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இந்த தகவலை கூறியுள்ளார். தற்போது பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதற்கு முன்னர் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு இந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு 592.55 கோடியை மத்திய நிதி அமைச்சகம் தற்போது ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டதட்ட 50 கோடி ரூபாய் தற்போது அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 1.62 கோடியும், ஒரு மணி நேரத்திற்கு 6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 11,263 ரூபாயும் செலவிடப்படுகின்றது. இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கிறார்கள்.