மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சிப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் பதவி ஏற்ககூடும் எனவும் தகவல் வெளியாகின. ஆனால் இதனை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுத்தார். இந்த சூழலில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.
கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை, இதனால்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது என்றும், எனவே ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.