Skip to main content

சமஸ்கிருத ஆவணத்தின்படி அலகாபாத் பெயர் மாற்றம்...

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
allahabad


உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஊரான அலகாபாத்தின் பெயர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலகாபாத்தை பிரக்யாராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலகாபாத் என்ற ஊரில் கங்கை நதி இணைகிறது. 
 

சில ஆவணங்களின் படி, முஹலாய மன்னர் அக்பரின் ஆட்சிக்கு முன்பு வரைக்கும் அலகாபாத்தின் பெயர் பிரயாகா என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர், அவரின் ஆட்சி காலத்தில் பிரயாகா என்ற பெயர் இல்லகாபாத் என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதனால், சில வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், உபி முதல்வர் யோகி இதன் பெயரை சம்ஸ்கிருத ஆவணங்களில் இருப்பது போன்று மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது. இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக பிரக்யாராஜ் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்