இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களாக, கரோனா பாதிப்பு என்பது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 90 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் தொடங்கி, பாமர மக்கள் வரை அனைவரும் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி காலமானார்.